2025 மே 19, திங்கட்கிழமை

புதிய நீர்மூழ்கியும் சீனாவின் திருட்டுத்தனமும்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசலில் இயங்கும் 039ஏ வகை நீர்மூழ்கிக் கப்பல்களை மறுகட்டமைப்பதன் மூலம் அமைதியான நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கை சீன கடற்படைக்கு உதவும் என்று இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய்வான் மறு ஒருங்கிணைப்பு மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் பிராந்திய மோதல்களுக்கான சாத்தியமான போரிலேயே இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
039ஏ வகை நீர்மூழ்கிக் கப்பலின் மேலும் ஒரு மேம்பட்ட புதிய மாறுபாட்டை கடற்படை கொண்டிருப்பதாகவும் இது கடற்படையின் சுறுசுறுப்பு மற்றும் திருட்டுத்தனத்தை அதிகரிப்பதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலான 039ஏ, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் நீண்ட நேரம் நீரில் மூழ்கி ஒளிந்து கொள்ளும் திறன் கொண்டது.

பிரான்ஸின் நீர்மூழ்கிக் கப்பல் கலைக்களஞ்சிய ஆசிரியரான எரிக் ஜெனிவெல் மற்றும் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த முன்னாள் சோனார் தொழில்நுட்ப வல்லுனர் ரிச்சர்ட் டபிள்யூ. ஸ்டிர்ன் ஆகியோரின் கூட்டு ஆய்விலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

039டி என்று அழைக்கப்படும் புதிய மாறுபாடு, ஒரு தனித்துவமான திருட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டோம் கவர்கள், சுக்கான், வழிசெலுத்தல் விளக்குகள், கண்காணிப்பு ஜன்னல்கள் மற்றும் மேலோட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

039டி என்பது சீனாவில் உருவாக்கப்பட்ட அமைதியான டீசல் மற்றும் மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாக நம்பப்படுகிறது என்று ஆய்வு தெரிவிப்பதுடன், 2024 ஆம் ஆண்டில் பாவனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுவதும் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை விவரிக்கும் என்சைக்ளோபீடியாவை டிசெம்பரில் வெளியிட்ட ஜெனிவெல், சீன நீர்மூழ்களில் இல்லாத அசாதாரணமான பாய்மரம் 039ஏயில் இருப்பதைக் கண்டறிந்தார்.

அந்த மாற்றங்கள் அனைத்தும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்று இருவரினதும் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X