Editorial / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி அரசு பேருந்துகளில் ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அனைத்து மாநிலங்களிலும், அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அவர், ரக்ஷா பந்தன் தினமான இன்று சகோதரிகளுக்கு பரிசு ஒன்றை அளிப்பதாக கூறி பெண்களுக்கான பேருந்து கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், கட்டணமின்றி பயணம் செய்யலாம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago