2025 மே 16, வெள்ளிக்கிழமை

பெண் கைதிகளுக்கு இடையில் மோதல்: 42 பேர் பலி

Janu   / 2023 ஜூன் 21 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

இந்த சம்பவத்தினால் 42 பெண் கைதிகள் மரணித்துள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் என்று  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .