Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடனான அழைப்பொன்றில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஜோ பைடன் மற்றும் அவரது மகன் குறித்து கலந்துரையாடியதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலைக்கான ஒரே தீர்வாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி விலக்குதலே அமையும் என ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் தலைவர் அடம் ஷிவ் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடனான தனது இவ்வாண்டு ஜூலை 25ஆம் திகதி அழைப்பு குறித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செய்தியாளர்களுக்கான அறிக்கை வெளியாகியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன், தான் உப ஜனாதிபதியாக இருந்தபோது தனது பதவியை தவறாகப் பயன்படுத்தினாரா என விசாரிக்குமாறு ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வினவியதாக கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸிகியுடனான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பானது பிரச்சினைகளின் நடுநாயகமாக விளங்குகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலானது பெரும்பாலும் வாழ்த்துத் தெரிவிப்பதாகவே இருந்ததாகவும் ஆனால் மோசடி மற்றும் ஜோ பைடன், அவரது மகனைப் பற்றியும் தொட்டுச் சென்றதாக வெள்ளை மாளிகையிலிருந்த செய்தியாளர்களிடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தவறாக எதையும் செய்யவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான றூடி கில்யானி ஆகியோர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்பை நியாயப்படுத்தியுள்ளனர்.
2 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
25 minute ago