Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 27 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய பிறகு நிலைமை போராக மாறியது. காசா மீது இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் மீது வீசப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கக் கூடும் என்று அவர் தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவற்றில், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகள் அனுப்புவதற்கு பைடன் விதித்த தடையை நீக்கும்படி இராணுவத்துக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளாார். இத்தகவலை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கூறும்போது,
“நிறைய விஷயங்களுக்கு இஸ்ரேல் ஆர்டர் கொடுத்துள்ளது. அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளது. ஆனால், பைடன் அரசு அவற்றை அனுப்பி வைக்கவில்லை. தற்போது அவை அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், முன்னாள் ஜனாதிபதி பைடன், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருமே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள்தான். எனினும், சக்திவாய்ந்த அதிக எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க பைடன் தடை விதித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .