Ilango Bharathy / 2022 ஜூலை 08 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பொம்மையினால் தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதாகக் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமானுஷ்ய விடயங்கள் குறித்து ஆய்வு செய்துவருபவர் மைக் யார்க். ,
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஒன்லைனில் அமானுஷ்யம் நிறைந்த பொம்மை எனக் கூறப்படும் ஒரு பொம்மையை வாங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த பொம்மையை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருமுறை அவரது கெமராவில் குறித்த பொம்மையை வீடியோ எடுத்தபோது அது கண்சிமிட்டியதாக கூறும் மைக், அதைப்பற்றி அறிய ஸ்பிரிட் பாக்ஸ் பரிசோதனை செய்த போது தனது பெயர் ஜெனட் என அந்த பொம்மை சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பொம்மையினால் பல சிரமங்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அப் பொம்மையின் அருகே இருந்து பணிபுரியும்போது தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாகவும், தனது நண்பர்களுக்கும் இதேபோல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மைக்," ஜேனட்-ன் பின்புறம் 1903 என்று பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இப் பொம்மைக்கு 119 வயது ஆகிறது. ஜேனட் கண்சிமிட்டுவதை எனது குடும்பத்தினர் பலமுறை பார்த்துள்ளனர். இப் பொம்மைக்குள் சிறுமியின் ஆவி உள்ளது. அதுகுறித்த ஆய்வில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025