Ilango Bharathy / 2022 மார்ச் 09 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த இரண்டு வாரங்களைக் கடந்து நீடித்து வருகின்றது.
குறிப்பாக உக்ரேன் தலைநகர் கீவ் (Kyiv) உள்ளிட்ட சில பகுதிகளில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரேனின் இராணுவத்தில் இணைந்து போராடிய 33 வயதான நடிகர் பஷா லீ (Pasha Lee) கடந்த 6 ஆம் திகதி கீவ் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகங்களைக் கொண்ட பாஷா லீ -ஐ தேசம் இழந்துள்ளதாக ரசிகர்களும், உக்ரேன் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, உக்ரேன் தலைநகர் கீவ்வில் ரஷ்யப் படைகள் தாக்கக்கூடும். எனவே, மக்கள் பாதுகாப்பாக நிலவறைக்குள் சென்று பதுங்கிக்கொள்ளுமாறு உக்ரேன் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026