Ilango Bharathy / 2023 மார்ச் 26 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்காரணமாக அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனுக்கு பல மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் சீன அரசு ரஷ்யாவுக்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இஷெவ்ஸ்க் என்ற நகரில் நிகிடாகோர்புனோவ் என்ற இளைஞர் ஒருவர் போருக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.
அதாவது அந்த இளைஞரின் கையில் வைத்திருந்த பதாகையில் “நீங்கள் போருக்கு எதிராக இருந்தால் என்னை கட்டிப்பிடித்துச் செல்லுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து பலரும் அவரை கட்டிப்பிடித்து தனது ஆதரவை தெரிவித்துச் சென்றனர் .
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக நிகிடாவை கைது செய்தனர்.
இந்நிலையில் அவருக்கு 15,000 ரூபில்கள் அபராதம் விதிக்கப்பட்டுபின் விடுவிக்கப்பட்டார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026