Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் வடக்கு காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பின்னர் தெற்கு காசாவை நோக்கி தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் காசாவில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
ஏற்கனவே போரின் விளைவால் காசாவில் உணவு, குடிநீர், உயிர்காக்கும் மருந்து ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால் பாதிகப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஹமாசுக்கு எதிரான “போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் ஜோ பைடன் நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் 147 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
13 minute ago
28 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
48 minute ago
53 minute ago