2025 மே 16, வெள்ளிக்கிழமை

போர் முடிவுக்கு வரவேண்டும் - தென்னாபிரிக்கா தெரிவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரிலான நடவடிக்கையை தென்னாப்பிரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ராமபோசா  ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் 7 பேர் அடங்கிய குழுவினர் உடன் சென்றுள்ளனர்.

 இந்த பயணத்தில் அவர், ரஷிய  ஜனாதிபதி புட்டினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ராமபோசா கூறும்போது, நாங்கள் ஒரு தெளிவான செய்தியுடன் வந்திருக்கிறோம். அது, இந்த போரானது முடிவுக்கு வரவேண்டும்.

ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த போரால் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டு உள்ளது. உண்மையில், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .