2025 மே 05, திங்கட்கிழமை

போஸ்னியா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போஸ்னியா நாட்டிலுள்ள பாடசாலையொன்றில், அதன் பணியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பாடசாலையின் தலைவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் தூய்மை பணியாளராக இருந்தவர் மெஹ்மத்த உகாலிக். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சில மாணவர்கள் மாத்திரம் பரீட்சை எழுதுவதற்காக வந்துள்ளனர்.

இந்நிலையில், உகாலிக் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் பாடசாலையின், பாடசாலையின் தலைவர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை சுட்ட நிலையில், தன்னையும் சுட்டுள்ளார். எனினும் நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X