2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

Editorial   / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X