2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மடகஸ்காரில் போராட்டம்: தப்பியோடினார் ஜனாதிபதி

Freelancer   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடகஸ்காரில் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் , ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது. இது அந்நாட்டு ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ரஜோலினா பிரான்ஸ் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, தப்பியோடியதைத் தொடர்ந்து, இராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .