2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவின்  மன்னர் மூன்றாம் சார்லஸின்  முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபாரம்பரிய நிகழ்வொன்று  இம்முறை கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 பிரித்தானியாவின் மன்னர் மற்றும் ராணியாக  மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, வரும் மே மாதம் ஆறாம் திகதி முடிசூடவுள்ளனர்.

 இந்நிலையில்  அந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் பதவியேற்கும் சமயத்தில் அணிந்துகொள்ளப்படும் பாரம்பரியமான அரச உடையை அணிந்து கொள்ளும் பழக்கத்தை மன்னர் கைவிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் குறித்த நிகழ்வில் இராணுவ சீருடையை அணியவுள்ளார் எனவும்,  மூத்த உதவியாளர்களுடன் கலந்துரையாடிய பின்னரே  இம் முடிவை மன்னர் எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .