2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘மதுரோ கியூபாவுக்கு செல்வதை ரஷ்யா நிறுத்தியது’

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியூபாவுக்குச் செல்ல வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தயாராகியிருந்ததாகவும், ஆனால் ரஷ்யாவாலேயே நிறுத்தப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மைக் பொம்பயோ, தாங்கள் நேற்று முன்தினம் முழுவதும் அவதானித்தாகவும், நீண்ட நேரமாக ஜனாதிபதி மதுரோவை எவரும் பார்த்திருக்கவில்லை எனக் கூறியதுடன், விமான ஓடுபாதையில் விமானமொன்றை அவர் கொண்டிருந்ததாகவும், நேற்று முன்தினம் காலையில் வெளியேற அவர் தயாராகியிருந்ததாக தாங்கள் புரிந்து கொண்டதாகவும், அவர் இருக்க வேண்டும் என ரஷ்யர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மதுரோ கியூபத் தலைநகர் ஹவாவாவுக்குச் செல்லவிருந்ததாக மைக் பொம்பயோ தெரிவித்த நிலையில், “மைக் பொம்பயோ அதைக் கூறினார்… கியூபாவுக்கு அவரை எடுத்துச் செல்வதற்கு தயாரான விமானமொன்றை மதுரோ கொண்டிருக்கிறார். ஆனால் ரஷ்யர்கள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளனர். மிஸ்டர் பொம்யயோ, தயவுசெய்து, இது உண்மையாக ஒரு நகைச்சுவை” என ஜனாதிபதி மதுரோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மதுரோவுக்கான இராணுவ ஆதரவை, கியூப தலைமைத்துவம் உடனடியாக நிறுத்தாவிட்டால், முழுமையான தடையொன்றையும், மேலதிக பொருளாதாரத் தடைகளையும் கியூபா மீது விதிக்கவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பமைச்சர் விளாடிமிர் பட்ரினோ, உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் மைகேல் மொரெனோ, ஜனாதிபதி காவலர் தளபதி இவான் றபேல் ஹெர்ணான்டஸ் டலா ஆகியோர் எதிர்க்கட்சியுடன் பேச்சுக்களில் இருப்பதாகவும், அமைதியான முறையிலான ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X