Freelancer / 2023 ஜூன் 18 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோமா நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கணவர், இயல்பு நிலைக்கு திரும்பியதால் சமூக இணையதள விளம்பரம் மூலம் கிடைத்த ரூ.21 இலட்சம் நன்கொடையை திருப்பி அளிக்க சீனப் பெண் முடிவு செய்துள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. இவரது மனைவி டிங். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், ஜியாங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வந்தார்.
ஜியாங் லீயின் மருத்துவ செலவினங்களுக்கு சேமிப்பு பணம் முழுவதும் காலியானது. இதனால் சமூக இணையதளம் மூலம் தனது கணவரின் நிலையை எடுத்துக் கூறி நிதி திரட்டினார் டிங். மொத்தம் 4,055 நன்கொடையாளர்கள் நிதியுதவி செய்ததில் ரூ.21 லட்சம் நன்கொடை கிடைத்தது. அதோடு, ஜியாங் லீ விரைவில் குணமடைவார் என்ற ஆறுதல் தகவல்களையும் நன்கொடையாளர்கள் டிங்குக்கு அனுப்பி வந்துள்ளனர்.
ஜியாங் லீ மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்த போதிலும், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் ஜியாங் லீ.
இத்தகவலை சமூக இணையதளத்தில் தெரிவித்துள்ள டிங், நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் பெற்ற நன்கொடைகளை திரும்ப செலுத்தும் முடிவையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago