Editorial / 2018 ஜூன் 22 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் தோற்கடிக்கப்பட்ட மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக், தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், அவரது மனைவியிடம் காணப்பட்ட சொகுசுப் பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தடுமாறியுள்ளார்.
மலேஷியாவின் அபிவிருத்தி நிதியத்தில், பண மோசடி இடம்பெற்றதெனக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில், படுதோல்வியை, ரஸாக் சந்தித்திருந்தார்.
அத்தேர்தலின் பின்னர், முதன்முதலாக, விரிவான நேர்காணலொன்றை வழங்கியுள்ள அவர், மலேஷிய அபிவிருத்தி நிதியத்திலிருந்து தான் நன்மை பெற்றிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளில், ரஸாக்கின் மனைவியிடம், பல்வேறு சொகுசுப் பொருட்கள் கைப்ப்றறப்பட்டன. அவற்றில், ஏராளமான நகைகளும் உள்ளடங்குகின்றன. அது தொடர்பில் கேட்கப்பட்ட போது, “இந்தப் பொருட்களுக்கான நிதி மூலம் எதுவென்று, எனக்குத் தெரியாது. ஆனால் இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, இவை, அன்பளிப்புகளாக ஒரு முறை வரவிருந்தன என்று குறிப்பிட்டார். ஆனால், அவற்றை அவர் பெற்றிருக்கவில்லை” என்று, குழப்பமான பதிலொன்றை வழங்கினார்.
அதேபோல், அரச பணம் 681 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள், ரஜீப்பின் தனிப்பட்ட கணக்குக்கு மாற்றப்பட்டன என்ற குற்றச்சாட்டும் காணப்பட்டது. அது தொடர்பில் கேட்கப்பட்ட போது, தேர்தல் காலமென்பதால், நிறுவனங்களிடமிருந்து பணம் பெறவில்லை எனவும், அதனாலேயே அப்பணத்தைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025