Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 11 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் வடக்கு ஒசேஷியாவில் உள்ள மலைப்பகுதியில் இறந்தவர்களின் கிராமம் என அழைக்கப்படும் கிராமமொன்று உள்ளது.
இக்கிராமத்தில் 99 கல்லறைகள் உள்ளதாகவும் இங்கு நிலவும் மர்மத்தாலும் பயத்தாலும் யாரும்இங்கு வசிப்பதில்லை எனவும் இதனால் இக் கிராமமானது வெறிச்சோடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் இறந்துபோன தங்கள் உறவினர்களை இங்கு அடக்கம் செய்ததால் இங்கு கல்லறை உருவானதாக கூறப்படுகிறது.
இங்கு சில கல்லறைகளில் படகுகள் இருப்பதை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய இந்த படகு உதவியதாக இந்த மக்கள் நம்பியுள்ளனர். ஆகவே இறந்த மக்களை படகில் வைத்து புதைத்துள்ளனர். அதே போல் ஆரய்ச்சியாளர்கள் பல கல்லறைகள் முன்பும் ஒரு கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கல்லறையில் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்த பின்னர் கிணற்றில் நாணயங்களை வீசுவார்களாம். நாணயங்கள் கீழே இருக்கும் கற்களுடன் மோதினால் அவர்களின் ஆன்மா சொர்க்கத்தை அடையும் என நம்புகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago
9 hours ago
15 May 2025