2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மல்லருக்குப் பதிலளித்தார் ட்ரம்ப்

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு தொடர்பாக விசாரித்துவரும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரால், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதில்களை அனுப்பியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கேள்விகளின் போது, தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளதாகவும், தேர்தலுக்குப் பின்னைய கேள்விகள் தொடர்பில் பதிலளிப்பதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் றூடி ஜூலியானி தெரிவித்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் நேரடியான விசாரணையை மேற்கொள்ள றொபேர்ட் மல்லர் விரும்பிய போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் தரப்பு, அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X