Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களான எலான் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெர்க்கும் நேருக்கு நேராக நிஜமாகவே சண்டை போடப் போகிறார்கள்.
இது டிவிட்டரில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்,. சமீபத்தில் டிவிட்டரின் பெயரையும், லோகோவையும் மாற்றினார்.
டிவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் த்ரெட்ஸ் எனும் சமூக ஊடகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார்.
அப்போது டிவிட்டரை பிரதி செய்து த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக மஸ்க் கிண்டல் செய்ய இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை தீவிரமடைந்து தற்போது இருவரும் நேருக்கு நேராக நிஜமாக மோதிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.
ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலையான ஜியு ஜிட்சூ பயிற்சி எடுத்து வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்த மஸ்க், இரும்பு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டு நிஜ சண்டைக்கு தயாரா என சவால் விடுத்தார். அதை ஜூக்கர்பெர்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மஸ்க்கும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றவர். எனவே இவரும் சண்டைக்காக தயாராகி வரும் புகைப்படங்களை, பயிற்சி செய்யும் புகைப்படங்களை டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி ஜூக்கர்பெர்க் உடனான சண்டை டிவிட்டரில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த சண்டை நடக்குமா நடக்காதா என்பது உறுதி இல்லை என்றாலும் மஸ்க், ஜூக்கர்பெர்க்கின் அதிரடியான பயிற்சி புகைப்படங்கள் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago