Editorial / 2018 நவம்பர் 20 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரில், றோகிஞ்சா முஸ்லிம்கள் மீது அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் காயமடைந்தனர் என, பொலிஸாரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவித்தனர். தலைநகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில், நேற்று முன்தினம் (18) இந்த வன்முறை இடம்பெற்றது.
ராக்கைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்து றோகிஞ்சா மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகமொன்றிலிருந்து, அம்மக்களில் சிலரை வெளியே கடத்துவதற்கு முயன்றனர் என, இரண்டு பேர் தடுத்து வைக்கப்பட்ட பின்னணியிலேயே, இத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
மியான்மாரிலிருந்து 106 றோகிஞ்சாக்களை நாட்டுக்கு வெளியே கடத்துவதற்கான படகை உரிமைப்படுத்திய குற்றச்சாட்டிலேயே, இந்த இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ்வாறு கடத்துவதுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மீதே, அகதி முகாமில் வைத்து, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்களைப் பொலிஸார் சுற்றிவளைத்ததோடு, வாள்கள் கொண்டும் கற்கள் கொண்டும், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என, பொலிஸ் தரப்புகள் தெரிவித்தன.
எனினும், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் நிராகரித்தார்.
ராக்கைனில் றோகிஞ்சாக்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து, 720,000க்கும் மேற்பட்டோர், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களைத் திரும்பவும் மியான்மாரில் குடியேற்றுவதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
எனினும், மீளத் திரும்புவதற்கான சூழ்நிலை, மியான்மாரில் இன்னமும் ஏற்படவில்லை என, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள மக்களும், மீளத் திரும்புவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அவர்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
இந்நிலையில், இவர்களின் பிரச்சினையை வேறு விதத்தில் கையாளுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பங்களாதேஷில் இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்ந்து நீளுமென, பங்களாதேஷ் தரப்புகள் தெரிவிக்கின்றன.
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago