2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மியான்மார் இராணுவத்துடன் தொடர்புடைய பக்கங்களை நீக்கியது பேஸ்புக்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் இராணுவத்துடன் மறைமுகமான தொடர்புகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான பேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. மியான்மாரில், வெறுப்புப் பேச்சையும் தவறான தகவல்கள் பரவுதலையும் கட்டுப்படுத்த, பேஸ்புக் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், விரைந்த பணிகளை மேற்கொள்வதற்கு பேஸ்புக் முனைவதையே இது காட்டுகிறது.

மியான்மாரில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் விளைவாக, 730,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், றோகிஞ்சா மக்களுக்கெதிரான “இனவழிப்பு” என, இது வர்ணிக்கப்படுகிறது.

மியான்மாரில் பிரதானமான சமூக ஊடக வலையமைப்பாகக் காணப்படும் பேஸ்புக்கின் மூலமாகவே, றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்டன எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவை தொடர்பில், போதிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என, பேஸ்புக்கும் ஒப்புக்கொண்டிருந்தது.

இந்நிலையில், 425 பக்கங்கள், 17 குழுக்கள், 135 கணக்குகள் ஆகியவற்றை, பேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளதாக நேற்று (19) தெரிவித்த பேஸ்புக், இவற்றுக்கு மேலதிகமாக, 15 இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தது.

களிப்புக்கான கணக்குகள், சுயாதீனமான செய்தி, அழகுக்கான பக்கங்கள், வாழ்க்கைமுறை தொடர்பான பக்கங்கள் என, இக்கணக்குகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டாலும், இராணுவத்துடனோ அல்லது இதற்கு முதல் நீக்கப்பட்ட கணக்குகளுடனோ, இக்கணக்குகள் தொடர்புகளைக் கொண்டிருந்தன என, பேஸ்புக் தெரிவிக்கிறது.

இவ்வாண்டில் ஏற்கெனவே, ஓகஸ்ட், ஒக்டோபர் மாதங்களில் கணக்குகள் அழிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடவையாக, இராணுவத்துடன் தொடர்புடைய கணக்குகள், பேஸ்புக்கால் அழிக்கப்பட்டுள்ளன.மியான்மார் இராணுவத்துடன் மறைமுகமான தொடர்புகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான பேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. மியான்மாரில், வெறுப்புப் பேச்சையும் தவறான தகவல்கள் பரவுதலையும் கட்டுப்படுத்த, பேஸ்புக் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், விரைந்த பணிகளை மேற்கொள்வதற்கு பேஸ்புக் முனைவதையே இது காட்டுகிறது.

மியான்மாரில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் விளைவாக, 730,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், றோகிஞ்சா மக்களுக்கெதிரான “இனவழிப்பு” என, இது வர்ணிக்கப்படுகிறது.

மியான்மாரில் பிரதானமான சமூக ஊடக வலையமைப்பாகக் காணப்படும் பேஸ்புக்கின் மூலமாகவே, றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்டன எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவை தொடர்பில், போதிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என, பேஸ்புக்கும் ஒப்புக்கொண்டிருந்தது.

இந்நிலையில், 425 பக்கங்கள், 17 குழுக்கள், 135 கணக்குகள் ஆகியவற்றை, பேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளதாக நேற்று (19) தெரிவித்த பேஸ்புக், இவற்றுக்கு மேலதிகமாக, 15 இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தது.

களிப்புக்கான கணக்குகள், சுயாதீனமான செய்தி, அழகுக்கான பக்கங்கள், வாழ்க்கைமுறை தொடர்பான பக்கங்கள் என, இக்கணக்குகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டாலும், இராணுவத்துடனோ அல்லது இதற்கு முதல் நீக்கப்பட்ட கணக்குகளுடனோ, இக்கணக்குகள் தொடர்புகளைக் கொண்டிருந்தன என, பேஸ்புக் தெரிவிக்கிறது.

இவ்வாண்டில் ஏற்கெனவே, ஓகஸ்ட், ஒக்டோபர் மாதங்களில் கணக்குகள் அழிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடவையாக, இராணுவத்துடன் தொடர்புடைய கணக்குகள், பேஸ்புக்கால் அழிக்கப்பட்டுள்ளன.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X