Freelancer / 2024 மார்ச் 22 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல். இவர், மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 7ஆம் திகதியில் இருந்து அப்துல், ஐதராபாத்தில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த அப்துலின் தந்தை முகமது சலீம், அமெரிக்காவில் அவருடைய நண்பர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர்கள் /ஆம் திகதி முதல் அப்துலை காணவில்லை என்றும், இதுதொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.
மேலும், கடந்த வாரம் அப்துலின் தந்தைக்கு, அமெரிக்காவில் இருந்து ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாங்கள், உங்கள் மகனைக் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் 1,200 அமெரிக்க டொலர் கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால் அவருடைய சிறுநீரகத்தை விற்றுவிடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதனிடையே தங்கள் மகனைக் கண்டுபிடித்து பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்துலின் பெற்றோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், குடும்பத்தினர் சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், இவ்வருட ஆரம்பம் முதல் கடந்த வாரம் வரை இந்தியர்கள் 9 பேர் அமெரிக்காவில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. S
17 minute ago
26 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
36 minute ago
2 hours ago