Editorial / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீ நகரில், டசின் கணக்கானோர் காயமடைந்த அங்குள்ளவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல்களையடுத்து அங்கு சில பகுதிகளில் நடமாட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை இந்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் விதித்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரிகள் இருவரும், அங்குள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே பிராந்தியமான ஜம்மு காஷ்மிருக்கான சுயாட்சியை மீளப் பெறும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஹிந்து தேசியவாத அரசாங்கத்தின் இம்மாத ஐந்தாம் திகதி முடிவுக்கெதிராக கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், காஷ்மிர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படைகள் மீது கடந்த சனிக்கிழமை இரவு 47 தடவைகள் கல்லெறியப்பட்டதாகவும், நேற்று முன்தினம் 20 தடவைகள் கல்லெறியப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர, ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமாவதாக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியப் படைகளால் பிரயோகிக்கப்பட்ட இறப்பர் குண்டுகளால் காயமடைந்த பெரும்பாலோனோரை உள்ளடக்கிய இரண்டு டசின் கணக்கானோர் ஶ்ரீநகரின் பிரதான வைத்தியசாலைகள் இரண்டில் அனுமதிக்கப்பட்டதாக, தம்மை பெயரிட மறுத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இறப்பர் காயமடைந்த பெரும்பாலோனோர் அடையாளங்காணப்பட்டு கைதுசெய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சிகிச்சையைப் பெறுவதில்லை என அங்குள்ளவர்களும் பொலிஸாரும் கூறுகின்றனர்.
அந்தவகையில், ஜம்மு பிராந்தியத்தின் பகுதிகளில் இணையம், செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்க அனுமதித் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தொழில்நுட்ப பிரச்சினையொன்றாலே பகுதியளவில் இவ்வாறு ஏற்பட்டதாக ஜம்மு பிரிவு ஆணையாளர் சஞ்சீவ் வெர்மா வெளிப்படுத்தியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago