Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் மீண்டும் `நரகத்துக்கான வழி` (Portal To Hell) திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ‘பெர்ரிஸ்ஸா‘ என்ற ஏரியொன்று உள்ளது.
இது மாண்டிசெல்லோ அணையால் உருவாக்கப்பட்டது எனவும், வடக்கு சான் பிரான்சிஸ்கோ பகுதிக்கு நீர் மற்றும் மின்சாரத்தை வழங்குவதற்காக இது பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வினோத துளையையே நரகத்துக்கான வழிஎன அப் பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
அணையின் நீர்மட்டம் உயரும் போது மேலதிக நீரானது சுமார் 72 அடி அகலம் கொண்ட இப் பிரம்மாண்ட துளையின் மூலம் செல்லும் வகையில் குறித்த துளை கட்டப்பட்டுள்ளது.
இத் துளை வழியாக நீர் பயணிக்கும்போது பிரம்மாண்ட சுழலை உருவாக்கும். இதன் காரணமாகவே, இதனை நரகத்துக்கான வழி என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
அத்துடன் இப்பிரமாண்ட சுழல்களைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்திற்கு பிறகு, இந்த துளைக்கு அருகே மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வழியானது தற்போது மீண்டும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .