Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாடி, கடந்த மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை மீள நடத்துவதை தான் எதிர்ப்பதாக நேற்று தெரிவித்ததுடன், அரசியல் நடவடிக்கையை நிறுத்த முயலும் எவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படுவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அதிகரித்துள்ள நிலையிலேயே அபாடியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும், தேர்தல் மீள நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றம் வலியுறுத்துகின்ற நிலையிலேயே, ஷியா மதகுருவான மொக்டாடா அல் சதாரின் பிரிவால் வெல்லப்பட்ட தேர்தலை மீள நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என பிரதமர் அபாடி கூறியுள்ளார்.
சட்டத்தின் கைகளிலேயே தேர்தலை மீள நடத்துவது தங்கியிருப்பதாகவும் அரசியல்வாதிகளிடமல்ல என செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த பிரதமர் அபாடி, தேர்தலை இரத்துச் செய்வதற்கான அதிகாரத்தை அரசாங்கமும் நாடாளுமன்றமும் கொண்டிருக்கவில்லையெனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வாக்குப் பெட்டிகளை வைத்திருந்த இடமொன்று தீப்பற்றிருந்த நிலையில், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்று எனக் கூறிய பிரதமர் அபாடி, அரசியல் நடைமுறையை தடுக்க முற்படுபவர்கள் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார் எனத் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில், குறித்த தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நால்வரைக் கைதுசெய்ய ஈராக்கிய நீதிமன்றமொன்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. நால்வரில், மூவர் பொலிஸ் அதிகாரிகள் என்பதுடன், ஒருவர் சுயாதீன உயர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணியாளர் ஆவார்.
ஆரம்பகட்ட அறிக்கையின்படி, தீப்பிடித்த இடத்தில் பல இடங்களில் மண்ணெய் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், கண்காணிப்பு கமெராக்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஒரு பூட்டும் உடைக்கப்படவில்லையென தெரியவருவதாக பிரதமர் அபாடி கூறியுள்ளார்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025