2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

மீள ஆரம்பமாகவுள்ள காணாமல்போன எம்.எச்370 விமானத்துக்கான தேடல்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியா எயார்லைன்ஸ் விமானமான எம்.எச்370-இன் சிதிலங்களுக்கான தேடலானது 239 பேருடன் விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

55 நாள்களைக் கொண்ட புதிய தேடுதலானது மார்ச்சில் ஆரம்பித்து மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு பயணித்தபோது 2014ஆம் ஆண்டு போயிங் 777 ரக இவ்விமானம் காணாமல் போயிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X