Editorial / 2018 நவம்பர் 21 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தத்துக்கு மத்தியில், அவ்விடயத்தில் நேரடியாகக் குற்றஞ்சாட்ட ப்படும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், அடுத்த மன்னராக வருவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில், ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என, சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் குடும்பமான அல் சௌட் குடும்பத்தைச் சேர்ந்த டசின்கணக்கான இளவரசர்களும் மைத்துனர்களும், அடுத்த மன்னராக யார் வருவது என்ற ஒழுங்கில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், முடிக்குரிய இளவரசரின் தந்தையும் நாட்டின் மன்னருமான சல்மான் உயிருடன் இருக்கும் வரை, இவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அவர் தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது. மன்னர் சல்மானுக்கு, 82 வயது ஆகும்.
கஷோக்ஜியின் கொலை தொடர்பில், முடிக்குரிய இளவசரருக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பு எழுந்திருந்தாலும், மன்னரின் விருப்புக்குரிய மகனாக, அவரே தொடர்ந்து இருக்கிறார் என்பதோடு, அவரை நியாயப்படுத்தும் வகையிலும், மன்னர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், மன்னர் சல்மான் இறந்த பின்னர், அவரின் சகோதரரான இளவரசர் அஹ்மட் பின் அப்துல்அஸிஸை, மன்னராக நியமிப்பது குறித்து, ஆராய்ந்து வருகின்றனர். இளவரசர் அப்துல்அஸிஸுக்கு 72 வயது என்பதோடு, முடிக்குரிய இளவரசரின் மாமனார் ஆவார். மன்னர் சல்மானின் உயிருடன் இருக்கின்ற ஒரே முழுமையான சகோதரர் இவரென்பதோடு, இவர் மன்னராக வருவதற்கு, குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்புப் பிரிவுகளும் சில மேற்கத்தேய நாடுகளும் ஆதரவளிக்குமென, சவூதித் தரப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது இத்தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரச குடும்பத்துக்குள் பதற்றமான நிலை ஏற்படாமெனக் கருதப்படுகிறது. நாட்டின் முடிக்குரிய இளவரசராக இருந்தாலும், நாட்டின் முழு அதிகாரமும், முடிக்குரிய இளவரசரிடமேயே காணப்படுகிறது எனக் கருதப்படுகிறது.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், தனக்குச் சவாலாக இருந்த அனைவரையும், இவர் சிறைக்கு அனுப்பினார் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
34 minute ago