Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு - காஷ்மிர் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்காட்டையாக இருந்த சங்கிலி உடைந்து விழுந்துவிட்டது என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காஷ்மிர் குறித்த முடிவில் எதிர்ப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
தயவு செய்து காஷ்மிர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பார்க்குமாறு கோரினார்.
குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாதத்துக்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுய நல குழுக்கள் ஆகியோரே, தனது அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அரசியல் பாகுபடின்றி இந்திய மக்கள் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர் என்றும் அவசியமானது, ஆனால் சாத்தியமற்றது என்று மக்கள் கருதியவை தற்போது மெய்யாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
370ஆவது, 35 ஏ பிரிவால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது என்றும் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலி உடைந்து விழுந்தன என்றும் கூறியுள்ளார்.
இனி, மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள் என்றும் இனி அவர்களுக்கு வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம் என்றும் கூறிய அவர், லடாக், ஜம்மு காஷ்மிரிலுள்ள தனது சகோதர, சகோதரிகள் சிறப்பான எதிர்காலத்தை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அதன்பிரகாரம், ஜம்மு-காஷ்மிரில் தேர்தல் நடைபெறும்; தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை , ஜம்மு-காஷ்மிர் மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago