2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த ஊழியர்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் ஒருவர் தனது முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவரே தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து தன்னை பணி நீக்கம் செய்ததால்  ஆத்திரமடைந்து, தனது முதலாளிக்குச் சொந்தமான வீட்டை கிரேன் கொண்டு இடித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட  ஆரம்பித்தால் குறித்த சம்பவம்  வைரலானது.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த ஊழியரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு சுமார் 5000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் ஆஜராகும் படியும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அந்நிறுவனத்தின் முதலாளி கருத்துத் தெரிவிக்கையில் ”அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இந்த சேதங்களை சரி செய்ய பல மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X