2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அமைச்சர் தற்கொலைக்கு முயற்சி

Mayu   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் அவசரநிலை இராணுவச் சட்டத்துக்கு பரிந்துரைத்ததற்காக கைதான அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யாங் ஹயூன் சிறையில் தன் உயிரைமாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

தென்கொரியாவில் அவசரநிலை இராணுவச் சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்புக்கு பின்னா் திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு அளித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் கிம் யாங் ஹயூன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவசரநிலை இராணுவ ஆட்சி அமல்படுத்திய விவகாரம் தொடா்பான விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் தாமாகவே கிம் யாங் ஹுயூன் ஆஜரானதாகவும், அவரது கைப்பேசி பறிக்கப்பட்டு அவா் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், சிறையில் தன் உயிரைமாய்த்துக்கொள்ள முயற்சித்த கிம் யாங்கை காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தென்கொரியா அதிகாரி ஷின் யோங் ஹே புதன்கிழமை (11) தெரிவித்தார்.

இந்த தகவலை நீதித்துறை அமைச்சர் பார்க் சங் ஜே, தென்கொரியா பாராளுமன்றக் கூட்டத்தில் உறுதி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் யூன் சுக் இயோலுக்கு எதிராக எதிர்க்கட்சியினா் தாக்கல் செய்த பதவிநீக்கத் தீா்மானத்தின் மீது சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஆளுங்கட்சியினா் புறக்கணித்தனா்.

இதையடுத்து, மற்றொரு தீா்மானத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X