2025 நவம்பர் 05, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் பெருந்தொகைப் பணம்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிரின் வீட்டில் பெருந்தொகைப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாககவும், பணச்சலவைக்காக அவர் தற்போது விசாரிக்கப்படுவதாகவும் அரச வழக்குத் தொடருநர்கள் தெரிவித்துள்ளனர்.

130 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கான அதிகமான யூரோக்கள், ஐக்கிய அமெரிக்க டொலர்கள், சூடானிய பவுண்ட்களை பாதுகாப்புச் சேவைகள் கண்டுபிடித்துள்ளன.

பல மாதங்களாக இடம்பெற்ற ஆர்ப்பாடங்களைத் தொடர்ந்து ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஓமர் அல் பஷிர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன், தற்போது கோபார் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

351,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்கள், ஆறு மில்லியன் யூரோக்கள், ஐந்து பில்லியன் சூடானிய பவுண்ட்களைக் கொண்ட சூட்கேஸ்கள், ஓமர் அல்-பஷிரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஓமர் அல்-பஷிர் விசாரணைக்குட்படுத்துவதை உறுதிப்படுத்திய தகவல் மூலம், கோபார் சிறைச்சாளையில் ஓமர் அல்-பஷிரை அரச வழக்குத் தொடருநர்கள் விசாரணைக்குட்படுத்துவர் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், முழுமையாக பணங்களைக் கொண்டிருந்த சில சாக்குகளுக்கு அருகில் இராணுவச் சீருடை தரித்தோர் இருக்கும் புகைப்படத்தை நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட றேடியோ டபங்கா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X