சீனாவில் நபர் ஒருவர் தனது முன்னாள் மனைவியைத் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தங்லு
மற்றும் அவரது மனைவியான லமு.
டிக் டொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் இவர்கள் பிரபலமடைந்துள்ளனர்.

11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகரத்து செய்துள்ளனர்.
ஆனால், விவாகரத்து செய்த பின்னரும் தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு லமுவை அவரது முன்னாள் கணவர் தங் லு கட்டாயப்படுத்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் லமு தனது சமூகவலைதள செயலியான டுவ்யுனில் புதிய வீடியோ தொடர்பாக ஒ ன்லைனில் “நேரலையில் ” வீடியோ வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
இதனை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இதன் போது அங்கு திரடீரென வந்த தங்லு , தன் முன்னாள் மனைவி லமு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை நேரலையில் பலரும் பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து படுகாயங்களுக்குள்ளான லமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) தங் லுவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.