2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முழு நீளக் காற்சட்டைக்குள் 3 மலைப்பாம்புகள்: இளைஞர் கைது

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் இருந்து மூன்று பர்மிய மலைப்பாம்புகளைத்  தனது முழு நீளக் காற்சட்டைக்குள் வைத்து பஸ்ஸில்  கடத்த முயன்ற இளைஞர் அமெரிக்க-கனேடிய எல்லையில் வைத்துப்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான ‘கால்வின் பாட்டிஸ்டா‘ என்ற இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்மிய மலைப்பாம்புகள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுவதால், அவற்றை இறக்குமதி செய்வது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X