Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, நேற்று (23) ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் குஜராத், கோவா, அசாம், பீகார், சதீஸ்கர், கர்நாடகம், மராட்டியம், மேற்கு வங்காளம், காஷ்மிர், திரிபுரா, தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளில், நேற்று வாக்குப்பதிவு இடம்பெற்றன. இந்தத் தேர்தலில், 10 பெண்கள் உட்பட 237 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதுடன், 28.022 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில், ஆந்திராவை பொறுத்தவரையில் ஆந்திரா, மராட்டிய எல்லையோரத்தில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றன.
அத்துடன் மராட்டிய மாநிலத்தில், 249 வேட்பாளர்களும் குஜராத் மாநிலத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், இங்கு, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உட்பட 370 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த மாநிலத்தில் மொத்தமாக 51,851 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. அத்தோடு அசாமில் 4 தொகுதிகளில் 54 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதுடன், இந்த மாநிலத்தில் நேற்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
ஒடிசாவில், 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 42 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றன. இந்தத் தொகுதிகளில், 417 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேரளாவில் 20 தொகுதிகளுக்காக, இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதுடன், வயநாட்டு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடைபெற்றமையால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago