Editorial / 2018 ஜூலை 01 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலிபான்களுடனான தனது அரசாங்கத்தின் யுத்தநிறுத்தத்தின் உத்தியோகபூர்வ முடிவொன்றை அறிவித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே, தனது அரசாங்கத்தின் 18 நாள் யுத்தநிறுத்தத்தின் முடிவை பிரகடனப்படுத்திய அஷ்ரப் கானி, சமாதான முன்னெடுப்புகளில் பங்கேற்குமாறான தனது முன்னைய கோரிக்கையை தலிபான்களிடம் மீண்டும் முன்வைத்திருந்தார்.
சமாதான முன்னெடுப்புகளுக்கான ஏகபோக உரிமையை ஒருவரும் கொண்டிருக்கவில்லையெனத் தெரிவித்த அஷ்ரப் கானி, தொடர்ந்தும் கொல்லப் போகின்றார்களா அல்லது சமாதான முன்னெடுப்பில் இணையப் போகின்றார்களா என்பது தற்போது தலிபான்களின் முடிவு எனக் கூறினார்.
எதிர்பாரதவிதமாக, ரமழான் முடிவையொட்டியதாக, தலிபான்களுடன் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்தை கடந்த ஐந்தாம் திகதி அஷ்ரப் கானி அறிவித்திருந்தார். இதையடுத்து, ஈகைத் திருநாளின் முதல் மூன்று நாட்களிலும் தமது போராளிகள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளைத் தாக்க மாட்டார்கள் என கடந்த ஒன்பதாம் திகதி தலிபான் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆயுதந்தரிக்காத தலிபான் போராளிகள் காபூல் வீதிகளில் பொதுமக்களுடன் புகைப்படங்கள், காணொளிகளை அரவணைத்து ஒன்றாக எடுத்தபடி இருந்திருந்தனர்.
அந்தவகையில் கருத்துத் தெரிவித்த அஷ்ரப் கானி, யுத்த நிறுத்தம் 98 சதவீதம் வெற்றி எனக் கூறியதுடன் பெரும்பாலான தலிபான் போராளிகளும் பொதுமக்களும் சமாதானத்தை விரும்புவதாகக் கூறினார்.
இதேவேளை, வட மாகாணமாக தஹாரிலுள்ள டஷ்ட்-ஈ-குவாலா மாவட்டத்தை தாங்கள் தாக்கியதாகவும் சில நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளைக் கொன்றதாகவும் அரசாங்க கட்டடங்களைக் கைப்பற்றியதாகவும் தலிபான்கள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025