Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட யேமனில் ஹூதிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் சாடா மாகாணத்தில் தஹ்யான் பகுதியில், பாடசாலை பஸ்ஸொன்று, சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரக கூட்ணியால் தாக்கப்பட்டபோது இறந்த 29 சிறுவர்கள் உள்ளிட்டவர்களின் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றிருந்தது.
குறித்த தாக்குதல் இடம்பெற்று பல நாட்களுக்குப் பின்னரும் உடல் உறுப்புகள் அடையாளங் காணப்படாது காணப்பட்டிருந்ததுடன், சில குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் எச்சங்களை தேடிய வண்ணம் காணப்பட்டிருந்தன.
சாடாவிலுள்ள கல்லறையொன்றில் 29 சிறிய புதைகுழிகள் தோண்டப்பட்டு அதற்குள் சிறுவர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமையே இறுதிச் சடங்குகள் இடம்பெறுவதாக இருந்தபோதும் பாதுகாப்புச் சந்தேகங்கள் காரணமாகவே அவை தாமதமாகியிருந்தன. இறுதிச் சடங்குகளுக்காக கூடும்போது அவை கூட்டணியின் மேலதிக விமானத் தாக்குதல்களால் இலக்கு வைக்கப்படுமென ஹூதிப் போராளிகள் தெரிவித்திருந்தனர்.
பொதுமக்களை இலக்கு வைத்ததை ஆரம்பத்தில் மறுத்திருந்த சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகக் கூட்டணி, தென் சவூதி அரேபியா நோக்கி ஹூதிகள் கடந்த வியாழக்கிழமை ஏவுகளை ஏவியவதற்கான பதிலடியான சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமே குறித்த தாக்குதல் எனக் கூறியிருந்தது. எனினும் இதன்பின்னர் விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மத்தித்த ஹூதிப் போராளிகளுடன் இச்சம்வம் குறித்து விசாரணை செய்வதாக கூட்டணி உறுதியளித்திருந்தது.
பாடசாலை கோடை ஒன்றுகூடலொன்றிலிருந்து திரும்பிய சிறுவர்கள் பயணித்த பஸ் நெருக்கடியான சந்தையொன்றுக்குள்ளால் பயணிக்கும்போதே தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் அதிகாரிகளின்படி குறைந்தது 50 பேர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டிருந்ததுடன் 77க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
44 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago