Editorial / 2024 மார்ச் 16 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷியாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை (15) தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரேனுடான மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரேன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி புட்டின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புட்டின் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 5-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புட்டினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் தனது வாக்கை, இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
28 minute ago
2 hours ago