Freelancer / 2023 ஜூன் 11 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா முயற்சித்து வருகிறது.

தற்போது இரு தரப்பிலும் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago