Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் கிறீமியாவிலுள்ள கருங்கடல் பிராந்தியத்திலுள்ள கல்லூரியொன்றில் மாணவரொருவர் தன்னைத்தானே நேற்று கொல்ல முன்னர் கட்டடமொன்றினூடு சக மாணவர்களை நோக்கிச் சுட்டத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேர்ச் நகரத்திலுள்ள கல்லூரிக்கு நேற்று பிற்பகலில் துப்பாக்கியுடன் வந்த 18 வயதான விளாடிஸ்லவ் றொஸ்லியாகோவ்வே சுட ஆரம்பித்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் உடல், தானாக ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பின்னர் கல்லூரியில் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதலை நடத்துவதற்கான அவரது காரணம் என உடனடியாக என்னவெனத் தெரியாத நிலையில், குறித்த சம்பவம், ஐக்கிய அமெரிக்க பாடசாலைகளில் மாணவர்களால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.
குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெரும்பாலோனோர் பதின்ம வயதிலான மாணவர்கள் என்பதோடு, துகள், சன்னக் காயங்களாலேயே கொல்லப்பட்டிருந்தனர். வெடிப்பொன்றுடன் ஆரம்பித்த தாக்குதலில் மேலும் வெடிப்புகள் தொடர்ந்திருந்ததாக அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, இது பயங்கரவாதம் என்ற ரீதியில் விசாரணை நடத்துவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்ததோடு, கவச வாகனங்களுடனான படையினர் சம்பவ இடத்தில் காணப்பட்டதோடு, குறித்த நகரத்திலுள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகளிலிருந்து சிறுவர்களை அழைத்துச் செல்லுமாறு பெற்றோர் கோரப்பட்டிருந்தனர். எவ்வாறெனினும் பாரிய குற்றங்களை விசாரிக்கும் மாநில அலகான விசாரணைக் குழு, குறித்த சம்பவத்தை பயங்கரவாதத்திலிருந்து பாரிய கொலைகளாக மாற்றியிருந்தது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago