Ilango Bharathy / 2022 ஏப்ரல் 25 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானாது இரண்டு மாதங்களையும் கடந்து நீடித்து வருகின்றது.
அதே சமயம் உலக நாடுகள் இப்போரைக் கைவிடுமாறு கூறிவந்தாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனிடையே உக்ரேன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதியை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ” ”இப் போரை நிறுத்த வேண்டும் என்றும்
ஆரம்பத்திலிருந்த ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். போரை முடிப்பதற்காக தான் அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அவரை சந்திக்க கூடிய எண்ணம் எனக்கு இல்லை.
ஏனெனில் எங்களின் நட்பு நாடுகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் ரஷ்ய நாட்டின் மீது நம்பிக்கை எங்களுக்கு கிடையாது. மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் மக்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே தான் பேச்சுவார்த்தை மேற்கொள்ளதயார்” எனத் தெரிவித்துள்ளார்.
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026