2025 நவம்பர் 05, புதன்கிழமை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை: தற்போதைய நிலையறிய இரண்டு வாரம்

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுவரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி 2012ஆம் ஆண்டு ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நேற்று (03) விசாரணைக்கு வந்தது. அப்போது எழுவர் பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் பன்வரிலால் புரோஹித்திடம் நிலுவையில் உள்ளதாகவும், தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க இரண்டு வார அவகாசம் தேவை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்று விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே எழுவர் பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளரிடம் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X