Editorial / 2019 மே 10 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஏழுபேரையும் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி, ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இணைந்து மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்று (09) இடம்பெற்ற போது இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேநேரம் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை குறித்து உயர்நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும் இது குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை விவகாரம் குறித்த இறுதி தீர்மானத்தை தமிழக ஆளுநரே எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago