2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லெபனான் மீதான தாக்குதல்: 2 நாட்களில் 40 பேர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 10 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2 நாட்களில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக, லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளை ஒரே இரவில் இஸ்ரேல் கடுமையாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமையில் (8) இருந்து, கடலோர நகரமான டயரில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் என்று, லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த நகரில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை (8) தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் சார்பில் எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் அடங்குவதாக லெபனான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதேவேளை, சனிக்கிழமை (9), மற்ற நகரங்களில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளைச் சேர்ந்த 7 வைத்தியர்கள் அடங்குவர். 

இதேபோல் வரலாற்று நகரமான பால்பெக்கைச் சுற்றியுள்ள கிழக்கு சமவெளிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X