Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

1957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வின் தகவலின்படி, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றுமொரு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரது கொரிய தொழிலாளர் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 2026 பாராளுமன்ற தேர்தலில் 99.97% வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 15-வது உச்ச மக்கள் பேரவையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் மார்ச் 15-ம் திகதியன்று நடைபெற்றது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்ததாலோ அல்லது கடலில் பணிபுரிந்ததினால் 0.0037% பேரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை, மேலும் 0.00003% பேர் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.93% பேர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர், அதேசமயம் 0.07% பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இது வட கொரியத் தேர்தல்களில் வழக்கத்திற்கு மாறாக கவனிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கையாகும்.
வட கொரிய தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், அறிஞர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 687 பிரதிநிதிகள் சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்ததால், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இந்த செயல்முறையை ஒரு "காட்சித் தேர்தல்" என்று விவரித்தனர். குறிப்பிடத்தக்க வகையில், 1957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங்கும் ஒருவர். இவர் கல்லிம்கில் தொகுதி எண் 5-ல் வெற்றி பெற்றார்.
வட கொரியாவில் இதுபோன்ற மகத்தான வெற்றிகள் வழக்கமானவை என்றாலும், இந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் இணையத்தில் உடனடியாக கவனத்தை ஈர்த்தன. இதற்கு நெட்டிசன்கள் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன்களில் ஒருவர், “அந்த 0.07% பேருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி” என்று எழுதினார். மற்றொருவர், கிம்மின் படத்துடன், “அந்த 0.07% பேரின் பெயர்களைக் கூறுங்கள்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது நபர், “இந்த கோடை காலத்தில் மக்கள் தொகை 0.07% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். “அந்த 0.07% பேர் இப்போது நாட்டின் மிகவும் தேடப்படும் நபர்களாகிவிட்டனர்” என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.
10 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago