Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிரணியால் கட்டுப்படுத்தப்படுகின்ற வடமேற்கு சிரியாவில் தொடர்ந்து அரசாங்கப் படைகள் முன்னேறுகையில் அரசாங்கத்தின் விசுவாசிகளுக்கும், போராளிகளுக்குமிடையேயான மோதல்களில் 55 பேர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளையும், அயல் ஹமா, அலெப்போ, லடாக்கியா மாகாணங்களையும் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து அல்-கொய்தாவின் முன்னாள் சிரியக் கிளையால் தலைமை தாங்கப்படுகின்ற ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாமே கட்டுப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியில் வேறு சில ஆயுதக் குழுக்களும் இயங்குகின்றன.
இந்நிலையில், மேற்குறித்த பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் அரசாங்கத்துக்கு சார்பான படைகள் 23 பேரும், இஸ்லாமிய ஆயுததாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்த போராளிகள் 32 பேரும் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட ஹமா, தென் இட்லிப்பில் டசின் கணக்க்கான வான் தாக்குதல்களையும் சிரிய அரசாங்கம் நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் மேலும் கூறியுள்ளது.
இஸ்லாமிய ஆயுததாரிகள், போராளிகளிடையேயுள்ள ஹமா, இட்லிப் மாகாணங்களை பிரிக்கும் கஃபார் ஸிடா நகரம், அல்-லடம்னெஹ் கிராமத்தைக் சிரிய அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகள் கைப்பற்ற எதிர்பார்க்கையிலேயே குறித்த மோதல்கள் இடம்பெற்றதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago