Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மேற்கு சிரியாவில் நேற்று அதிகாலை வெடித்த மோதல்கள், வான் தாக்குதல்களில், குறைந்தது 10 பொதுமக்களும், பெரும்பாலாக சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான படையினரை உள்ளடக்கிய 35 பேரும் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஆயுததாரிகளாலும், அவர்களுடன் இணைந்த போராளிகளாலும் இம்மாத ஆரம்பத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் இரண்டை ரஷ்ய ஆதரவிலான சிரிய அரசாங்கப் படைகள் மீளக் கைப்பற்ற முயன்ற நிலையிலேயே மோதல்கள் வெடித்ததாக, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
வடமேற்கு ஹமா மாகாணத்திலுள்ள ஜிபின், தல் மலேயின் கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கான தோல்வியில் முடிவடைந்த ஐந்து முயற்சிகளை நேற்று முன்தினம் காலை முதல் சிரிய அரசாங்கமும், அதனுடன் இணைந்த போராளிகளும் மேற்கொண்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரிய அரசாங்கத்தின் வான் தாக்குதல்களில் ஒன்பது இஸ்லாமிய ஆயுததாரிகளும், போராளிகளும் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இதேவேளை, ஹமா மாகாணத்துக்கு தோன்றிய மோதல்களில், நிலக்கணிவெடிப்பொன்றில் கொல்லப்பட்ட எண்மர் உட்பட சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான 26 போராளிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹமாவின் அயல் மாகாணமான இட்லிப்பில், சிரிய அரசாங்கத்தின் வான் தாக்குதல்களில், மூன்று சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago