2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெனிசுவேலாவிலிருந்தான 2ஆவது கப்பலைக் கைப்பற்றிய ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவிலிருந்து அண்மையில் புறப்பட்ட  எண்ணெய்க் கப்பலொன்றை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியதாக அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐ. அமெரிக்காவானது வெனிசுவேலாக் கடற்பரப்பிலிருந்தான எண்ணெய் கொண்டு செல்லும் கப்பலை கைப்பற்றுவது இம்மாதம் இரண்டாவது தடவையாகும்.

பனாமாக் கொடியுடனான செஞ்சரிஸ் என்ற குறித்த கப்பலானது கடந்த ஐந்தாண்டுகளில் கிரேக்க, லைபீரியக் கொடியுடனும் பயணித்துள்ளதுடன், ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இக்கப்பல் காணப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X