2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

Freelancer   / 2026 பெப்ரவரி 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கிய கொள்கைத்தூண் ஒன்றை தகர்த்துள்ளது.

வரிகளை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அல்ல, மாறாக நாடாளுமன்றத்திற்கே உரியது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டின் அவசரகால அதிகாரச் சட்டம் இவ்வாறான பாரிய வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், கடந்த ஒரு வருடத்தில் வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை அரசாங்கம் மீண்டும் வர்த்தகர்களுக்கே வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதனை ஒரு பாரிய குழப்பம் என நீதியரசர் பிரட் கவனாக் எச்சரித்துள்ளார்.

மற்ற நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது ட்ரம்ப் பயன்படுத்தி வந்த வரி அச்சுறுத்தல்  எனும் ஆயுதம் இப்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகள் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வழிவகுக்கும்.

குடிவரவு மற்றும் மத்திய அரசாங்க மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு இதுவரை நீதிமன்றம் ஓரளவு இடமளித்து வந்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X