2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கும் பிரித்தானியா

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி அமைச்சர் “ஜெர்மி ஹன்ட்” தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார். இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக சில திட்டங்களை வெளியிட்டார்.

குறிப்பாக கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி வரவு செலவு திட்டத்தில், நிறுவனங்களுக்கான வரி உயர்வு மற்றும் அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாகத் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரம் நிலை குலைந்து போனது. குறிப்பாக டொலருக்கு நிகரான  பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து பிரதமர் லிஸ்டர்ஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனை தொடர்ந்து பிரித்தானியாவின் நிதி அமைச்சராக இருந்த குவாஸி குவார்ங்டகை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ்டிரஸ் உத்தரவிட்டிருக்கிறார்.

 மேலும் புதிய நீதிமன்றியாக ஜெர்மி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த சூழலில் பிரதமர் லீஸ் டிரஸ் அறிவித்திருந்த அனைத்து வரி குறைப்புகளையும் புதிய நீதிமன்றி ஜெர்மி ஹன்ட் முழுமையாக திரும்ப பெற்றுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பிரதமர் லிஸ்டடிரசுக்கு வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X